وَلَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِۦ نَفْسُهُۥ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ ٱلْوَرِيدِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக நாம் மனிதனை படைத்தோம். அவனது உள்ளம் அவனிடம் எதை கிசுகிசுக்கிறதோ அதை நாம் அறிவோம். நாம் அவனுக்கு (அவனுடைய) கழுத்தின் நரம்பைவிட மிக நெருக்கமானவர்கள் (அவன் மனதிற்குள் பேசுவதையும் நாம் மிக அறிவோம், அவன் மீது நாம் முழு ஆதிக்கமுடையவர்கள் ஆவோம்.)
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக நாம் மனிதனை படைத்தோம். இன்னும் அவனது உள்ளம் அவனிடம் எதை கிசுகிசுக்கிறதோ அதை நாம் அறிவோம். நாம் அவனுக்கு (அவனுடைய) கழுத்தின் நரம்பைவிட மிக நெருக்கமானவர்கள் (அவன் மனதிற்குள் பேசுவதையும் நாம் அறிவோம், அவன் மீது நாம் முழு ஆதிக்கமுடையவர்களாக இருக்கிறோம்.)
Tamil Translation - Abdulhamid Baqawi16. நிச்சயமாக நாம்தான் மனிதனை (முதன் முதலாகவும்) படைத்தோம். அவன் மனதில் உதிக்கும் எண்ணத்தையும் நாம் அறிவோம். பிடரியிலுள்ள இரத்த நரம்பைவிட நாம் அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கிறோம்.