caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hujuraat அத்தியாயம், வசனம் 15

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 106 · 49:15

إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ لَمْ يَرْتَابُوا۟ وَجَٰهَدُوا۟ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ فِى سَبِيلِ ٱللَّهِ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلصَّٰدِقُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்கள் எல்லாம் எவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைகொண்டு, பிறகு சந்தேகிக்காமல், தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகிறார்களோ அவர்கள்தான். அத்தகையவர்கள்தான் உண்மையா(ன நம்பிக்கையா)ளர்கள்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்கள் எல்லாம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைகொண்டவர்கள்தான். பிறகு அவர்கள் சந்தேகிக்கவில்லை. இன்னும், தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகிறார்கள். அத்தகையவர்கள்தான் உண்மையா(ன நம்பிக்கையா)ளர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi15. (உண்மையான) நம்பிக்கையாளர்கள் எவர்களென்றால், அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு, பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாது, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிரையும் பொருளையும் தியாகம் செய்து போர் புரிவார்கள். இவர்கள்தான் (தங்கள் நம்பிக்கையில்) உண்மையானவர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70