ذَٰلِكَ بِأَنَّهُمُ ٱتَّبَعُوا۟ مَآ أَسْخَطَ ٱللَّهَ وَكَرِهُوا۟ رِضْوَٰنَهُۥ فَأَحْبَطَ أَعْمَٰلَهُمْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇது (வானவர்கள் இப்படி அடிப்பது) ஏனெனில், நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்விற்கு கோபமூட்டியதை பின்பற்றினார்கள். அவனது பொருத்தத்தை வெறுத்தார்கள். ஆகவே, அவர்களின் செயல்களை அல்லாஹ் வீணாக்கி விட்டான்.
Tamil Translation - Omar Sharifஇ(ப்படி வானவர்கள் அடிப்ப)து ஏனெனில், நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்விற்கு எது கோபமூட்டுமோ அதை பின்பற்றி நடந்தார்கள். இன்னும், அவனது பொருத்த(த்திற்குரிய இஸ்லாமிய மார்க்க)த்தை வெறுத்தார்கள். ஆகவே, அவர்களின் செயல்களை அல்லாஹ் வீணாக்கி விட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi28. இதன் காரணமாவது: நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்குக் கோப மூட்டக் கூடியவற்றையே பின்பற்றி, அவனுக்குத் திருப்தித்தரக்கூடியவற்றை வெறுத்து வந்தனர். ஆதலால், இவர்களுடைய நன்மைகள் அனைத்தையும் அல்லாஹ் அழித்துவிட்டான்.