ذَٰلِكُم بِأَنَّكُمُ ٱتَّخَذْتُمْ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوًا وَغَرَّتْكُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا فَٱلْيَوْمَ لَا يُخْرَجُونَ مِنْهَا وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇதற்கு காரணம் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை கேலியாக எடுத்துக் கொண்டீர்கள். உங்களை உலக வாழ்க்கை மயக்கிவிட்டது. ஆகவே, இன்று அதிலிருந்து (-நரகத்தில் இருந்து) அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள். இன்னும் அவர்களிடமிருந்து காரணங்கள் அங்கீகரிக்கப்படாது.
Tamil Translation - Omar Sharifஇதற்குக் காரணம், நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை கேலியாக எடுத்துக் கொண்டீர்கள். இன்னும், உலக வாழ்க்கை உங்களை மயக்கிவிட்டது. ஆகவே, இன்று அ(ந்த நரகத்)திலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள். இன்னும், அவர்கள் மன்னிப்பு கோருவதற்காக உலகத்திற்கு திரும்ப அனுப்பப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi35. இதன் காரணமாவது: நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக் கொண்டீர்கள். இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி விட்டது (என்றும் கூறப்படும்). இன்றைய தினம் நரகத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படமாட்டார்கள். அவர்களுடைய மன்னிப்புக் கோரலும் அங்கீகரிக்கப்படாது.