مِّن وَرَآئِهِمْ جَهَنَّمُ وَلَا يُغْنِى عَنْهُم مَّا كَسَبُوا۟ شَيْـًٔا وَلَا مَا ٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ أَوْلِيَآءَ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கின்றது. அவர்கள் சம்பாதித்தது அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் வேதனையில்) எதையும் தடுக்காது. அல்லாஹ்வை அன்றி அவர்கள் எவற்றை பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் (அவர்களை விட்டும் அல்லாஹ்வின் வேதனையில் எதையும் தடுக்காது.) அவர்களுக்கு பெரிய வேதனை உண்டு.
Tamil Translation - Omar Sharifஅவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கிறது. அவர்கள் சம்பாதித்ததும் அல்லாஹ்வை அன்றி அவர்கள் எவற்றை (தங்கள்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையில்) எதையும் தடுக்காது. இன்னும், பெரிய (கடுமையான) தண்டனை அவர்களுக்கு உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi10. இவர்களுக்கு (இவர்கள் மரணித்த) பின்னால் நரகம்தான் இருக்கிறது. அவர்கள் சேகரித்திருப்பவையோ அல்லது தங்களுக்குப் பாதுகாப்பாளர்கள் என்று அவர்கள் எடுத்துக்கொண்ட அல்லாஹ் அல்லாதவையோ, அவர்களுக்கு ஒரு பயனும் அளிக்காது. அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.