وَلَمَّا جَآءَ عِيسَىٰ بِٱلْبَيِّنَٰتِ قَالَ قَدْ جِئْتُكُم بِٱلْحِكْمَةِ وَلِأُبَيِّنَ لَكُم بَعْضَ ٱلَّذِى تَخْتَلِفُونَ فِيهِ فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதெளிவான அத்தாட்சிகளுடன் ஈஸா வந்த போது அவர் கூறினார்: “திட்டமாக நான் உங்களிடம் ஞானத்துடன் வந்துள்ளேன். இன்னும் நீங்கள் எதில் கருத்து வேற்றுமை கொள்கிறீர்களோ அதில் சிலவற்றை உங்களுக்கு விவரிப்பதற்காகவும் வந்துள்ளேன். ஆகவே, அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்!
Tamil Translation - Omar Sharifதெளிவான அத்தாட்சிகளுடன் ஈஸா வந்தபோது அவர் கூறினார்: “திட்டமாக நான் உங்களிடம் ஞான(மிகுந்த வேத)த்தை கொண்டுவந்துள்ளேன். இன்னும், நீங்கள் எதில் கருத்து வேற்றுமை கொள்கிறீர்களோ அதில் (சரியான) சிலவற்றை உங்களுக்கு விவரிப்பதற்காகவும் வந்துள்ளேன். ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்!”
Tamil Translation - Abdulhamid Baqawi63. ஈஸா தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபொழுது (தன் மக்களை நோக்கி) ‘‘மெய்யாகவே ஞானத்தை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவற்றில் சிலவற்றை உங்களுக்கு விவரித்தும் கூறுவேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்குக் கீழ்ப்படியுங்கள்'' என்றும்,