caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zukhruf அத்தியாயம், வசனம் 51

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 63 · 43:51

وَنَادَىٰ فِرْعَوْنُ فِى قَوْمِهِۦ قَالَ يَٰقَوْمِ أَلَيْسَ لِى مُلْكُ مِصْرَ وَهَٰذِهِ ٱلْأَنْهَٰرُ تَجْرِى مِن تَحْتِىٓ أَفَلَا تُبْصِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஃபிர்அவ்ன் தனது மக்களை அழைத்தான்: “என் மக்களே! எகிப்துடைய ஆட்சி எனக்கு சொந்தமானது இல்லையா? இந்த ஆறுகள் (என்னைச் சுற்றி) எனக்கு முன்னால் ஓடுகின்றன. நீங்கள் (இவற்றை) உற்று நோக்கவில்லையா?” என்று கூறினான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், ஃபிர்அவ்ன் தனது மக்களை அழைத்தான்: “என் மக்களே! எகிப்துடைய ஆட்சி எனக்கு சொந்தமானதாக இல்லையா? இந்த ஆறுகள் (என்னைச் சுற்றி) எனக்கு முன்னால் ஓடுகின்றன. ஆக, நீங்கள் (இவற்றை) உற்று நோக்கவில்லையா?” என்று கூறினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi51. பின்னர், ஃபிர்அவ்ன் தன் மக்களை நோக்கி, ‘‘என் மக்களே! இந்த ‘மிஸ்ர்' தேசத்தின் ஆட்சி எனதல்லவா? (அதிலிருக்கும்) இந்த (நைல்) நதி(யின் கால்வாய்)கள் என் கட்டளைப்படி செல்வதை நீங்கள் பார்க்கவில்லையா?'' என்று பறை சாற்றினான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70