وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَآ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦ فَقَالَ إِنِّى رَسُولُ رَبِّ ٱلْعَٰلَمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக நாம் மூஸாவை ஃபிர்அவ்ன் இன்னும் அவனது பிரமுகர்களிடம் நமது அத்தாட்சிகளுடன் அனுப்பினோம். அவர் கூறினார்: “நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனுடைய தூதர் ஆவேன்.”
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக நாம் மூஸாவை ஃபிர்அவ்ன் இன்னும் அவனது பிரமுகர்களிடம் நமது அத்தாட்சிகளுடன் அனுப்பினோம். ஆக, (அவர்களை நோக்கி) அவர் கூறினார்: “நிச்சயமாக நான் (உங்களுக்கு அனுப்பப்பட்ட) அகிலங்களின் இறைவனுடைய தூதர் ஆவேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi46. நிச்சயமாக மூஸாவை, நாம் நமது (பல) அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய மக்களிடமும் அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரின் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதர் ''என்று கூறினார்.