caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shura அத்தியாயம், வசனம் 5

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 62 · 42:5

تَكَادُ ٱلسَّمَٰوَٰتُ يَتَفَطَّرْنَ مِن فَوْقِهِنَّ وَٱلْمَلَٰٓئِكَةُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيَسْتَغْفِرُونَ لِمَن فِى ٱلْأَرْضِ أَلَآ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவற்றுக்கு (-ஏழு பூமிகளுக்கு) மேல் உள்ள வானங்கள் (அல்லாஹ்வின் மகிமையால்) பிளந்துவிடுவதற்கு நெருங்கி விடுகின்றன. வானவர்கள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிக்கின்றனர். இன்னும் பூமியில் உள்ளவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்கின்றனர். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்தான் மகா மன்னிப்பாளன், மகாக் கருணையாளன்.
Tamil Translation - Omar Sharifஅவற்றுக்கு (-ஏழு பூமிகளுக்கு) மேல் உள்ள வானங்கள் (அல்லாஹ்வின் அச்சத்தால்) பிளந்து தெரித்து விடுவதற்கு நெருங்கி விடுகின்றன. வானவர்கள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிக்கிறார்கள். இன்னும் பூமியில் உள்ளவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்கிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. (மனிதர்கள் செய்யும் பாவங்களின் காரணமாக) அவர்கள் மீது வானம் வெடித்து (விழுந்து) விடவும் கூடும். (அந்நேரத்தில்) வானவர்களும் (பயந்து) தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிசெய்து, பூமியில் உள்ளவர்க(ளின் குற்றங்க)ளை மன்னிக்குமாறு கோருவார்கள். (மனிதர்கள் பாவத்திலிருந்து விலகி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் என்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்வீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70