caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shura அத்தியாயம், வசனம் 36

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 62 · 42:36

فَمَآ أُوتِيتُم مِّن شَىْءٍ فَمَتَٰعُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَمَا عِندَ ٱللَّهِ خَيْرٌ وَأَبْقَىٰ لِلَّذِينَ ءَامَنُوا۟ وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் எல்லாம் இவ்வுலக வாழ்க்கையின் இன்பமாகும். நம்பிக்கை கொண்டு, தங்கள் இறைவனையே சார்ந்திருப்பவர்களுக்கு அல்லாஹ்விடம் (மறுமையில்) எது உள்ளதோ அதுதான் மிகச் சிறந்ததும் மிக நிரந்தரமானதும் ஆகும்.
Tamil Translation - Omar Sharifஆக, நீங்கள் (உலக பொருள்களில்) எது கொடுக்கப்பட்டுள்ளீர்களோ அவை எல்லாம் இவ்வுலக வாழ்க்கையின் இன்பமாகும். இன்னும், நம்பிக்கை கொண்டு, தங்கள் இறைவன் மீது நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்திரு)ப்பவர்களுக்கு அல்லாஹ்விடம் (மறுமையில்) எது உள்ளதோ அதுதான் மிகச் சிறந்ததும் மிக நிரந்தரமானதும் ஆகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi36. (இங்கு) உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதெல்லாம் (நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கைக்குரிய அற்ப இன்பங்களே! நம்பிக்கை கொண்டு, தங்கள் இறைவனையே நம்பியிருப்பவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் உள்ளவையோ மிக்க மேலானவையும் நிலையானவையும் ஆகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70