caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shura அத்தியாயம், வசனம் 26

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 62 · 42:26

وَيَسْتَجِيبُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَيَزِيدُهُم مِّن فَضْلِهِۦ وَٱلْكَٰفِرُونَ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களுக்கு (அவர்களில் சிலர் சிலருக்கு கேட்கின்ற துஆக்களுக்கு) அவன் பதில் அளிக்கின்றான் (அந்த துஆக்களை அங்கீகரிக்கின்றான்). இன்னும், தனது அருளால் அவர்களுக்கு அதிகம் கொடுப்பான். நிராகரிப்பாளர்கள் - அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களுக்கு (அவர்களில் சிலர் சிலருக்காக கேட்கின்ற துஆக்களுக்கு) அவன் பதில் அளிக்கிறான் (-அந்த துஆக்களை அங்கீகரிக்கிறான்). இன்னும், தனது அருளிலிருந்து அவர்களுக்கு (வெகுமதிகளை) அதிகப்படுத்துவான். எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi26. நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களின் பிரார்த்தனைகளையும் அங்கீகரித்து, அவர்களுக்குத் தன் அருளை அதிகப்படுத்துகிறான். நிராகரிப்பவர்களுக்குக் கடினமான வேதனைதான் கிடைக்கும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70