caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Fussilat அத்தியாயம், வசனம் 53

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 61 · 41:53

سَنُرِيهِمْ ءَايَٰتِنَا فِى ٱلْـَٔافَاقِ وَفِىٓ أَنفُسِهِمْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ ٱلْحَقُّ أَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ أَنَّهُۥ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் நமது அத்தாட்சிகளை (அவர்கள் வசிக்கின்ற பூமியின்) பல பகுதிகளிலும் (-மக்காவைச் சுற்றியுள்ள நாடுகளிலும்) அவர்க(ளுடைய உயிர்க)ளிலும் அவர்களுக்கு நாம் விரைவில் காண்பிப்போம். இறுதியாக நிச்சயமாக இதுதான் உண்மை என்று அவர்களுக்கு தெளிவாகிவிடும். நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான் என்பது (இந்த வேதத்தை நிராகரிப்பவர்களை தண்டிப்பதற்கும் இதை நம்பிக்கை கொண்டவர்களை இரட்சிப்பதற்கும்) உமது இறைவனுக்கு போதாதா?
Tamil Translation - Omar Sharifநாம் நமது அத்தாட்சிகளை (அவர்கள் வசிக்கின்ற பூமியின்) பல பகுதிகளிலும் (-மக்காவைச் சுற்றியுள்ள நாடுகளிலும்) அவர்க(ளுடைய உயிர்க)ளிலும் அவர்களுக்கு நாம் விரைவில் காண்பிப்போம். இறுதியாக, நிச்சயமாக இதுதான் உண்மை என்று அவர்களுக்கு தெளிவாகிவிடும். நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் நன்கு பார்ப்பவனாக இருக்கிறான் என்பது (இந்த வேதத்தை நிராகரிப்பவர்களை தண்டிப்பதற்கும்; இதை நம்பிக்கை கொண்டவர்களை இரட்சிப்பதற்கும்) உமது இறைவனுக்கு போதாதா?
Tamil Translation - Abdulhamid Baqawi53. நிச்சயமாக இவ்வேதம் உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு, நம் அத்தாட்சிகளை (உலகத்தின்) பல பாகங்களிலும் காண்பிப்பதுடன், அவர்களுக்குள்ளாகவும் அதிசீக்கிரத்தில் நாம் (நமது அத்தாட்சிகளைக்) காண்பிப்போம். (நபியே!) உமது இறைவன் நிச்சயமாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது (உமக்கு) போதாதா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70