نَحْنُ أَوْلِيَآؤُكُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَفِى ٱلْـَٔاخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِىٓ أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாங்கள் இந்த உலக வாழ்க்கையிலும் மறுமையிலும் உங்கள் பொறுப்பாளர்கள் ஆவோம். அதில் (மறுமையில் சொர்க்கத்தில்) உங்கள் மனங்கள் விரும்புகின்றதும் உங்களுக்கு உண்டு. இன்னும் அதில் நீங்கள் கேட்கின்றதும் உங்களுக்கு உண்டு.
Tamil Translation - Omar Sharif“நாங்கள் இந்த உலக வாழ்க்கையிலும் மறுமையிலும் உங்கள் நேசர்கள் ஆவோம். அ(ந்த சொர்க்கத்)தில் உங்கள் மனங்கள் விரும்புவதும் உங்களுக்கு உண்டு. இன்னும், அதில் நீங்கள் (வாய்விட்டு) கேட்பதும் உங்களுக்கு உண்டு.”
Tamil Translation - Abdulhamid Baqawi31. ‘‘நாங்கள் அவ்வுலக வாழ்க்கையிலும் உங்களுக்கு நண்பர்களாக இருந்தோம்; மறுமையிலும் (நாங்கள் உங்களுக்கு நண்பர்களே). சொர்க்கத்தில் உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு உண்டு. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்''