وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ رَبَّنَآ أَرِنَا ٱلَّذَيْنِ أَضَلَّانَا مِنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ ٱلْأَسْفَلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரிப்பவர்கள் கூறுவார்கள்:எங்கள் இறைவா! ஜின் மற்றும் மனிதர்களில் எங்களை வழிகெடுத்தவர்களை எங்களுக்குக் காண்பி! அவர்கள் (-வழிகெடுத்த அந்த இரு சாரார்களும்) மிகக் கீழ்த்தரமானவர்களில் ஆகிவிடுவதற்காக அவர்களை நாங்கள் எங்கள் பாதங்களுக்குக் கீழ் ஆக்கிக் கொள்கிறோம்.
Tamil Translation - Omar Sharifநிராகரிப்பவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! ஜின் மற்றும் மனிதர்களில் எங்களை வழிகெடுத்தவர்களை எங்களுக்குக் காண்பித்துக் கொடு! அவர்கள் (- வழிகெடுத்த அந்த இரு கூட்டங்களும்) மிகக் கீழ்த்தரமானவர்களில் ஆகிவிடுவதற்காக அவர்களை நாங்கள் எங்கள் பாதங்களுக்குக் கீழ் ஆக்கி (மிதித்து) விடுகிறோம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi29. நிராகரித்தவர்கள் அந்நாளில் (இறைவனை நோக்கி,) ‘‘எங்கள் இறைவனே! எங்களை வழிகெடுத்த மனிதர்களையும், ஜின்களையும் எங்களுக்கு நீ காண்பி. அவர்கள் இழிவுக்குள்ளாகும் பொருட்டு, நாங்கள் அவர்களை எங்கள் கால்களுக்குக் கீழாக்கி மிதிப்போம்'' என்று கூறுவார்கள்.