caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Fussilat அத்தியாயம், வசனம் 10

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 61 · 41:10

وَجَعَلَ فِيهَا رَوَٰسِىَ مِن فَوْقِهَا وَبَٰرَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَآ أَقْوَٰتَهَا فِىٓ أَرْبَعَةِ أَيَّامٍ سَوَآءً لِّلسَّآئِلِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் அதில் அதற்கு மேலாக மலைகளை ஏற்படுத்தினான். அதில் அருள்வளம் புரிந்தான். அதில் அதன் உணவுகளை திட்டமிட்டு நிர்ணயித்தான். (இவை எல்லாம் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய பூரணமான) நான்கு நாள்களில் முடிந்தன. (பூமியையும் அதில் உள்ள படைப்புகளைப் பற்றியும்) விசாரிப்பவர்களுக்கு சரியான பதிலாக (இதைச் சொல்லுங்கள்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவன் அதில் அதற்கு மேலாக மலைகளை ஏற்படுத்தினான். அதில், அருள்வளம் (-அபிவிருத்தி) செய்தான். அதன் உணவுகளை அதில் திட்டமிட்டு நிர்ணயித்தான். (இவை எல்லாம் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய பூரணமான) நான்கு நாட்களில் முடிந்தன. (பூமியையும் அதில் உள்ள படைப்புகளைப் பற்றியும்) விசாரிப்பவர்களுக்கு சரியான பதிலாக (இதைச் சொல்லுங்கள்).
Tamil Translation - Abdulhamid Baqawi10. அவனே பூமியின் மீது பெரும் மலைகளை அமைத்து, அதில் எல்லா விதமான பாக்கியங்களையும் புரிந்தான். மேலும், அதில் (வசிப்பவர்களுக்கு) வேண்டிய உணவுகளையும் நான்கு நாள்களில் நிர்ணயம் செய்தான். (அதுவும் நல்லவர்கள் தீயவர்கள் என்ற வித்தியாசமின்றி) கேட்பவர்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்குமாறும் செய்தான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70