فَلَمْ يَكُ يَنفَعُهُمْ إِيمَٰنُهُمْ لَمَّا رَأَوْا۟ بَأْسَنَا سُنَّتَ ٱللَّهِ ٱلَّتِى قَدْ خَلَتْ فِى عِبَادِهِۦ وَخَسِرَ هُنَالِكَ ٱلْكَٰفِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆனால், அவர்கள் நமது தண்டனையை பார்த்த போது அவர்களின் ஈமான் - நம்பிக்கை அவர்களுக்கு பலன் தரக்கூடியதாக இருக்கவில்லை. அவனது (முன் சென்ற) அடியார்கள் விஷயத்தில் சென்றுவிட்ட அல்லாஹ்வின் நடைமுறையைத்தான் (இவர்களுக்கும் அல்லாஹ் செய்து காட்டினான்). அப்போது நிராகரிப்பாளர்கள் நஷ்டமடைந்தார்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் நமது தண்டனையைப் பார்த்தபோது அவர்கள் நம்பிக்கை கொண்டது அவர்களுக்கு பலன் தரக்கூடியதாக இருக்கவில்லை. அவனது அடியார்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் நடைமுறை எது (முன்னர்) சென்றதோ அதே நடைமுறைதான் (இவர்களுடனும் பின்பற்றப்படும்). அப்போது நிராகரிப்பாளர்கள் நிச்சயம் நஷ்டமடைவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi85. ஆயினும், நம் வேதனையைக் கண்ணால் கண்ட பின்னர், அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. இதுவே, அல்லாஹ்வுடைய வழி. (இதற்கு முன்னரும்) அவனுடைய அடியார்களில் (இவ்வாறே) நிகழ்ந்திருக்கிறது. ஆதலால், (வேதனை இறங்கிய) அந்த நேரத்தில் நிராகரிப்பவர்கள் நஷ்டத்தையே அடைந்தார்கள்.