مِن دُونِ ٱللَّهِ قَالُوا۟ ضَلُّوا۟ عَنَّا بَل لَّمْ نَكُن نَّدْعُوا۟ مِن قَبْلُ شَيْـًٔا كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ ٱلْكَٰفِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வை அன்றி நீங்கள் அவர்களை வணங்கினீர்களே! அவர்கள் கூறுவார்கள்: “அவை எங்களை விட்டும் தவறிவிட்டன. மாறாக, இதற்கு முன்னர் நாங்கள் எதையும் வணங்குபவர்களாக இருக்கவில்லையே!” (என்றும் பொய் கூறுவார்கள்). இவ்வாறுதான், அல்லாஹ் நிராகரிப்பாளர்களை வழிகெடுக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்வை அன்றி (நீங்கள் அவர்களை வணங்கினீர்களே!) அவர்கள் கூறுவார்கள்: “அவை எங்களை விட்டும் தவறிவிட்டன. மாறாக, இதற்கு முன்னர் நாங்கள் எதையும் வணங்குபவர்களாக இருக்கவில்லையே!” (என்றும் பொய் கூறுவார்கள்). இவ்வாறுதான், அல்லாஹ் நிராகரிப்பாளர்களை வழிகெடுக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi74. அதற்கவர்கள், ‘‘அவையெல்லாம் எங்களை விட்டும் மறைந்து விட்டன. இதற்கு முன்னர் நாம் (அல்லாஹ் அல்லாத) எதையுமே அழைத்துக் கொண்டிருக்கவில்லையே!'' என்று (பொய்) கூறுவார்கள். இவ்வாறு நிராகரிப்பவர்கள் (உடைய புத்தி) தடுமாறும்படி அல்லாஹ் செய்துவிடுவான்.