مَنْ عَمِلَ سَيِّئَةً فَلَا يُجْزَىٰٓ إِلَّا مِثْلَهَا وَمَنْ عَمِلَ صَٰلِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُو۟لَٰٓئِكَ يَدْخُلُونَ ٱلْجَنَّةَ يُرْزَقُونَ فِيهَا بِغَيْرِ حِسَابٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionயார் ஒரு தீமையை செய்வாரோ அவர் அது போன்றதே தவிர கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்கள் அல்லது பெண்களில் யார் ஒருவர் அவர் நம்பிக்கையாளராக இருக்கின்ற நிலையில் நன்மையை செய்வாரோ அவர்கள் சொர்க்கத்தில் நுழைக்கப்படுவார்கள். அதில் அவர்கள் கணக்கின்றி உணவளிக்கப்படுவார்கள்.
Tamil Translation - Omar Sharif“யார் ஒரு தீமையை செய்வாரோ அவர் அது போன்றதே தவிர கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்கள் அல்லது பெண்களில் யார் ஒருவர் அவர் நம்பிக்கையாளராக இருக்கின்ற நிலையில் நன்மையை செய்வாரோ அவர்கள் சொர்க்கத்தில் பிரவேசிப்பார்கள். அதில் அவர்கள் கணக்கின்றி (உணவு, குடிபானம், இன்னும் பலவிதமான) அருட்கொடைகள் வழங்கப்படுவார்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi40. எவனேனும் தீங்கு செய்தால், அதைப் போன்ற தீங்கே தவிர (அதற்கதிகமாய்) அவனுக்குக் கூலியாகக் கொடுக்கப்பட மாட்டாது. ஆணோ பெண்ணோ எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார்கள். அதில் கணக்கின்றி (அதிகமாகவும்) கொடுக்கப்படுவார்கள்.