وَٱللَّهُ يَقْضِى بِٱلْحَقِّ وَٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِهِۦ لَا يَقْضُونَ بِشَىْءٍ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் உண்மையைத்தான் தீர்ப்பளிக்கின்றான். அவனை அன்றி அவர்கள் எவர்களை அழைக்கின்றார்களோ அவர்கள் எதையும் தீர்ப்பளிக்க மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கு செவிமடுப்பவன், உற்று நோக்குபவன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அல்லாஹ் உண்மையை (நீதமான தீர்ப்பை)த்தான் தீர்ப்பளிக்கிறான். அவனை அன்றி அவர்கள் எவர்களை அழைக்கிறார்களோ (-வணங்குகிறார்களோ) அவர்கள் எதையும் தீர்ப்பளிக்க மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi20. ஆதலால், முற்றிலும் நீதமாகவே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். இவர்கள் (இறைவனென) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவையோ (அதற்கு மாறாக) எத்தகைய தீர்ப்பும் கூறமுடியாது. நிச்சயமாக அல்லாஹ்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.