وَأَنذِرْهُمْ يَوْمَ ٱلْـَٔازِفَةِ إِذِ ٱلْقُلُوبُ لَدَى ٱلْحَنَاجِرِ كَٰظِمِينَ مَا لِلظَّٰلِمِينَ مِنْ حَمِيمٍ وَلَا شَفِيعٍ يُطَاعُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநெருங்கி வரக்கூடிய (மறுமை) நாளைப் பற்றி அவர்களை நீர் எச்சரிப்பீராக! உள்ளங்கள் (பயத்தால்) தொண்டைகளுக்கு அருகில் வந்துவிடும்போது அவர்கள் துக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அந்த அநியாயக்காரர்களுக்கு நண்பர் எவரும் இருக்கமாட்டார். (பரிந்துரை) ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஒரு பரிந்துரையாளரும் இருக்க மாட்டார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நெருங்கி வரக்கூடிய (மறுமை) நாளைப் பற்றி அவர்களை நீர் எச்சரிப்பீராக! உள்ளங்கள் (பயத்தால்) தொண்டைகளுக்கு அருகில் வந்துவிடும்போது அவர்கள் துக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அந்த அநியாயக்காரர்களுக்கு நண்பர் எவரும் இருக்கமாட்டார். (பரிந்துரை) ஏற்றுக்கொள்ளப்படும்படியான பரிந்துரையாளரும் இருக்க மாட்டார்.
Tamil Translation - Abdulhamid Baqawi18. (நபியே!) சமீபத்திலிருக்கும் (மறுமை) நாளைப் பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில் அவர்களுடைய) உள்ளங்கள் கோபத்தால் அவர்களின் தொண்டைகளை அடைத்துக் கொள்ளும். அநியாயம் செய்பவர்களுக்கு உதவி செய்பவர்கள் (அந்நாளில்) ஒருவரும் இருக்கமாட்டார். அனுமதி பெற்ற சிபாரிசு செய்பவர்களும் இருக்கமாட்டார்.