caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ghaafir அத்தியாயம், வசனம் 12

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 60 · 40:12

ذَٰلِكُم بِأَنَّهُۥٓ إِذَا دُعِىَ ٱللَّهُ وَحْدَهُۥ كَفَرْتُمْ وَإِن يُشْرَكْ بِهِۦ تُؤْمِنُوا۟ فَٱلْحُكْمُ لِلَّهِ ٱلْعَلِىِّ ٱلْكَبِيرِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇது ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், அவன் ஒருவனை மட்டும் அழைக்கப்பட்டால் நீங்கள் (அவனை ஏற்காமல்) நிராகரித்தீர்கள். அவனுக்கு இணை வைக்கப்பட்டால் (அவனை) நம்பிக்கை கொள்கிறீர்கள். (அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் என்றால் அதை நீங்கள் மறுத்து விடுகிறீர்கள். அல்லாஹ்வையும் வணங்கலாம், சிலைகளையும் வணங்கலாம் என்றால் அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராகி விடுகிறீர்கள்.) (ஆனால்,) எல்லா அதிகாரமும் மிக உயர்ந்தவனும் மிகப் பெரியவனுமாகிய அல்லாஹ்வுக்கே உரியது. (அப்படியிருக்க அவனுக்கு எதை இணையாக்க முடியும்.)
Tamil Translation - Omar Sharifஇது ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், அவன் ஒருவன் மட்டும் அழைக்கப்பட்டால் நீங்கள் (அவனை ஏற்காமல்) நிராகரித்தீர்கள். அவனுக்கு இணைவைத்து வணங்கப்பட்டால் (அவனை) நம்பிக்கை கொள்கிறீர்கள். ஆக, எல்லா அதிகாரமும் (ஆட்சியும்) மிக உயர்ந்தவனும் மிகப் பெரியவனுமாகிய அல்லாஹ்வுக்கே உரியது. (அப்படியிருக்க அவனல்லாதவர்களை எப்படி வணங்க முடியும்.)
Tamil Translation - Abdulhamid Baqawi12. (அதற்கு இறைவன்,) ‘‘உங்களுக்கு இ(த்தண்டனை வந்த)தன் காரணமாவது: அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறினால், அதை நீங்கள் மறுத்தீர்கள். அவனுக்கு எவரும் இணை உண்டு என்று கூறப்பட்டால், அதை நீங்கள் நம்பினீர்கள்! ஆதலால், (இன்றைய தினம் உங்களுக்குக் கிடைத்திருக்கும் இவ்வேதனை) மிகப் பெரியவனும், மேலானவனுமாகிய அல்லாஹ்வுடைய தீர்ப்பே!'' (என்று கூறுவான்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70