فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَٱعْتَصَمُوا۟ بِهِۦ فَسَيُدْخِلُهُمْ فِى رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَٰطًا مُّسْتَقِيمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, எவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனைப் (பலமாகப்) பற்றிப் பிடித்தார்களோ அவர்களை தன் புறத்திலிருந்து கருணையிலும், அருளிலும் நுழைப்பான். இன்னும், தன் பக்கம் நேரான வழியையும் அவர்களுக்கு வழிகாட்டுவான்.
Tamil Translation - Omar Sharifஆக, எவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவ(ன் இறக்கிய குர்ஆ)னைப் பலமாகப் பற்றிப் பிடித்தார்களோ அவர்களை தன் புறத்திலிருந்து கருணையிலும், அருளிலும் அவன் பிரவேசிக்க வைப்பான். இன்னும், தன் பக்கம் (வருவதற்கு) நேரான வழியையும் அவர்களுக்கு அவன் வழிகாட்டுவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi175. ஆகவே, எவர்கள் அல்லாஹ்வை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அ(ந்த வேதத்)தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்கிறார்களோ அவர்களை அவன் தன் அன்பிலும், அருளிலும் செலுத்தி விடுகிறான். தன்னிடம் வருவதற்குரிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துகிறான்.