مَّن كَانَ يُرِيدُ ثَوَابَ ٱلدُّنْيَا فَعِندَ ٱللَّهِ ثَوَابُ ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ وَكَانَ ٱللَّهُ سَمِيعًۢا بَصِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவ்வுலகத்தின் பலனை மட்டும் எவர் நாடிக்கொண்டிருந்தாரோ (அவர் அறிந்து கொள்ளவும்), அல்லாஹ்விடம் இவ்வுலகம் இன்னும் மறுமையின் பலன் இருக்கிறது (எனவே இரண்டையும் நாடட்டும்). அல்லாஹ் நன்கு செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஇவ்வுலகத்தின் பலனை மட்டும் எவர் நாடுபவராக இருந்தாரோ (அவர் அறிந்து கொள்ளவும்), அல்லாஹ்விடம் உலகம் இன்னும் மறுமையின் பலன் இருக்கிறது. (எனவே இரண்டையும் அவர் நாடட்டும்). அல்லாஹ் நன்கு செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi134. (நம்பிக்கையாளர்களே!) இம்மையின் பலனை மட்டும் எவன் விரும்புவான்? அல்லாஹ்விடத்திலோ இம்மை மற்றும் மறுமையின் பலன் இருக்கிறது. அல்லாஹ் (ஒவ்வொருவரின் பிரார்த்தனையையும்) செவியுறுபவனாக, (ஒவ்வொருவரின் உள்ளத்தையும்) உற்று நோக்குபவனாக இருக்கிறான்.