تِلْكَ حُدُودُ ٱللَّهِ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ يُدْخِلْهُ جَنَّٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்களோ அவர்களை அவன் சொர்க்கங்களில் நுழைப்பான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.
Tamil Translation - Omar Sharifஇவை, அல்லாஹ்வின் சட்டங்களாகும். எவர்கள் அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்களோ அவர்களை அவன் சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi13. இவை அல்லாஹ்வின் சட்டவரம்புகளாகும். எவர்கள் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் சேர்க்கிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். அதிலேயே அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்.