caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 110

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:110

وَمَن يَعْمَلْ سُوٓءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُۥ ثُمَّ يَسْتَغْفِرِ ٱللَّهَ يَجِدِ ٱللَّهَ غَفُورًا رَّحِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர், ஒரு தீமையைச் செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே அநீதி இழைத்து விட்டு, பிறகு (அதிலிருந்து விலகி, கைசேதப்பட்டு) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாகக் காண்பார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், எவர், ஒரு தீமையைச் செய்வாரோ; அல்லது, தனக்குத்தானே அநீதி இழைப்பாரோ; பிறகு, அவர் (அதிலிருந்து விலகி, கைசேதப்பட்டு) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரோ அவர் அல்லாஹ்வை மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாகக் காண்பார்.
Tamil Translation - Abdulhamid Baqawi110. எவரேனும், ஒரு பாவத்தைச் செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே தீங்கிழைத் துக்கொண்டு, பின்னர் (அதிலிருந்து விலகி, உண்மையாகவே கைசேதப்பட்டு) அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை (அவனுடைய குற்றங்களை) மிக மன்னிப்பவனாகவும், (அவன் மீது) மிகக் கருணையுடையவனாகவும் காண்பான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70