وَإِذَا ذُكِرَ ٱللَّهُ وَحْدَهُ ٱشْمَأَزَّتْ قُلُوبُ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ وَإِذَا ذُكِرَ ٱلَّذِينَ مِن دُونِهِۦٓ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் ஒருவனை மட்டும் நினைவு கூரப்பட்டால் மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன (வெறுக்கின்றன). அவனை அன்றி மற்றவர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டால் அப்போது அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் ஒருவன் மட்டும் நினைவு கூரப்பட்டால் மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன (அதை வெறுக்கின்றன). அவனை அன்றி மற்றவர்கள் நினைவு கூரப்பட்டால் அப்போது அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi45. அல்லாஹ்வின் பெயரை மட்டும் தனியாகக் கூறப்பட்டால், மறுமையை நம்பாத அவர்களின் உள்ளங்கள் (கோபத்தால்) சுருங்கி விடுகின்றன. அவன் அல்லாதவை(களின் பெயர்கள்) கூறப்பட்டாலோ, அவர்கள் சந்தோஷப்படுகின்றனர்.