فَمَنْ أَظْلَمُ مِمَّن كَذَبَ عَلَى ٱللَّهِ وَكَذَّبَ بِٱلصِّدْقِ إِذْ جَآءَهُۥٓ أَلَيْسَ فِى جَهَنَّمَ مَثْوًى لِّلْكَٰفِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் மீது பொய் சொல்பவனை விடவும் உண்மையை -அது தன்னிடம் வந்தபோது- பொய்ப்பித்தவனை விடவும் மகா அநியாயக்காரன் யார்? நிராகரிப்பவர்களுக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா?
Tamil Translation - Omar Sharifஆக, அல்லாஹ்வின் மீது பொய் சொல்பவனை விடவும் உண்மையை - அது அவனிடம் வந்தபோது - பொய்ப்பித்தவனை விடவும் மகா அநியாயக்காரன் யார்? நிராகரிப்பவர்களுக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா? (கண்டிப்பாக அங்குதான் அவர்களின் தங்குமிடம் இருக்கிறது.)
Tamil Translation - Abdulhamid Baqawi32. அல்லாஹ்வின் மீது பொய் கூறி தன்னிடம் வந்த (வேதமாகிய) உண்மையைப் பொய்யாக்குபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? அத்தகைய நிராகரிப்பவர்கள் தங்குமிடம் நரகத்தில் இல்லையா?