caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zumar அத்தியாயம், வசனம் 26

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 59 · 39:26

فَأَذَاقَهُمُ ٱللَّهُ ٱلْخِزْىَ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَلَعَذَابُ ٱلْـَٔاخِرَةِ أَكْبَرُ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் கேவலத்தை சுவைக்க வைப்பான். (மறுமையில் தண்டனையை சுவைக்க வைப்பான்.) மறுமையின் வேதனை மிகப் பெரியது அவர்கள் (இதை) அறிய வேண்டுமே!
Tamil Translation - Omar Sharifஆக, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் கேவலத்தை சுவைக்க வைப்பான். (மறுமையிலும் தண்டனையை சுவைக்க வைப்பான்.) நிச்சயமாக மறுமையின் தண்டனை மிகப் பெரியது, அவர்கள் (இதை) அறிந்திருக்க வேண்டுமே!
Tamil Translation - Abdulhamid Baqawi26. இவ்வுலக வாழ்க்கையிலும் இழிவையே அவர்கள் சுவைக்கும்படி அல்லாஹ் செய்தான். மறுமையிலுள்ள வேதனையோ மிகப் பெரிது. (இதை) அவர்கள் அறிந்து கொள்ளவேண்டுமே!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70