فَٱلْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْـًٔا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்றைய தினம் எந்த ஓர் ஆன்மாவும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்றைய தினம் ஓர் ஆன்மாவிற்கு சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. இன்னும், (அடியார்களே!) நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi54. அந்நாளில் ஓர்ஆத்மா (அதன் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகரித்தோ) அநியாயம் செய்யப்படமாட்டாது. நீங்கள் செய்தவற்றுக்கே தவிர உங்களுக்குக் கூலி கொடுக்கப்பட மாட்டாது.