قَالُوا۟ يَٰوَيْلَنَا مَنۢ بَعَثَنَا مِن مَّرْقَدِنَا هَٰذَا مَا وَعَدَ ٱلرَّحْمَٰنُ وَصَدَقَ ٱلْمُرْسَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (-இறை மறுப்பாளர்கள்) கூறுவார்கள்: “எங்கள் நாசமே! யார் எங்களை எங்கள் தூங்குமிடத்தில் இருந்து எழுப்பியது?” (அதற்குப் பதிலாக நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள்:) இது (-இந்த மறுமை நாள்) ரஹ்மான் வாக்களித்ததும் தூதர்கள் உண்மையாகக் கூறியதும் ஆகும்.
Tamil Translation - Omar Sharif(இறை மறுப்பாளர்கள்) கூறுவார்கள்: “எங்கள் நாசமே! யார் எங்களை எங்கள் புதைக்குழியில் இருந்து எழுப்பியது?” (அதற்கு நம்பிக்கையாளர்கள் பதில் கூறுவார்கள்:) “இ(ந்த மறுமை நாளான)து எதை ரஹ்மான் வாக்களித்தானோ, தூதர்கள் உண்மை கூறினார்களோ அதுவாகும்.”
Tamil Translation - Abdulhamid Baqawi52. ‘‘எங்கள் துக்கமே! எங்களை நித்திரையில் இருந்து எழுப்பியவர் யார்?'' என்று கேட்பார்கள். (அதற்கு வானவர்கள் அவர்களை நோக்கி) “ரஹ்மான் (உங்களுக்கு) வாக்களித்ததும், நபிமார்கள் (உங்களுக்குக்) கூறிவந்த உண்மையும் இதுதான்'' (என்று கூறுவார்கள்).