وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا۟ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ قَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِلَّذِينَ ءَامَنُوٓا۟ أَنُطْعِمُ مَن لَّوْ يَشَآءُ ٱللَّهُ أَطْعَمَهُۥٓ إِنْ أَنتُمْ إِلَّا فِى ضَلَٰلٍ مُّبِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து நீங்கள் தர்மம் செய்யுங்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டால் நிராகரித்தவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி கூறுகின்றனர்: “அல்லாஹ் நாடினால் எவருக்கு உணவளித்து விடுவானோ அவருக்கு நாங்கள் உணவளிக்க வேண்டுமா? நீங்கள் வழிகேட்டிலேயே தவிர (நேர்வழியில்) இல்லை.” என்று (முஸ்லிம்களைப் பார்த்து கூறுகின்றனர்).
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து நீங்கள் தர்மம் செய்யுங்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டால் நிராகரித்தவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி கூறுகிறார்கள்: “அல்லாஹ் நாடினால் எவருக்கு உணவளித்து விடுவானோ அவருக்கு நாங்கள் உணவளிக்க வேண்டுமா? நீங்கள் தெளிவான தவறிலேயே தவிர (சரியான கருத்தில்) இல்லை.” என்று (முஸ்லிம்களைப் பார்த்து கூறுகிறார்கள்).
Tamil Translation - Abdulhamid Baqawi47. அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் (ஏழைகளுக்குத்) தானம் செய்யுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் “அல்லாஹ் நாடினால் அவனே உணவு கொடுக்கக்கூடியவர்களுக்கு நாம் உணவு கொடுக்கலாமா? பகிரங்கமான வழிகேட்டிலேயே தவிர நீங்கள் இல்லை'' என்றும் இந்த நிராகரிப்பவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.