سُبْحَٰنَ ٱلَّذِى خَلَقَ ٱلْأَزْوَٰجَ كُلَّهَا مِمَّا تُنۢبِتُ ٱلْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபூமி முளைக்க வைக்கக்கூடியதிலும் (தாவரங்களிலும்) அவர்களிலும் அவர்கள் அறியாதவற்றிலும் பல வகைகளையெல்லாம் படைத்தவன் மிகப் பரிசுத்தமானவன்.
Tamil Translation - Omar Sharifபூமி முளைக்க வைக்கக்கூடியதிலும் (-தாவரங்களிலும் மனிதர்களாகிய) அவர்களிலும் இன்னும் அவர்கள் அறியாதவற்றிலும் (மாறுபட்ட நிறங்களையும் ருசிகளையும் உடைய) எல்லா வகைகளையும் (ஆண், பெண் ஜோடிகளையும்) படைத்தவன் மிகப் பரிசுத்தமானவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi36. இவர்களையும், பூமியில் முளைக்கும் புற்பூண்டுகளையும் ஜோடி ஜோடியாகப் படைத்து இவர்கள் (இதுவரை) அறியாத மற்றவற்றையும் படைப்பவன் மிகப் பரிசுத்தமானவன்.