وَءَايَةٌ لَّهُمُ ٱلْأَرْضُ ٱلْمَيْتَةُ أَحْيَيْنَٰهَا وَأَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَأْكُلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்கு (நமது) அத்தாட்சி இறந்துபோன (-காய்ந்து போன) பூமியாகும். அதை நாம் உயிர்ப்பித்தோம். அதிலிருந்து நாம் வித்துக்களை வெளியாக்கினோம். அதில் இருந்துதான் அவர்கள் சாப்பிடுகின்றார்கள்.
Tamil Translation - Omar Sharifஇறந்துபோன (-காய்ந்து போன) பூமி அவர்களுக்கான (நமது வல்லமையை விளக்கும்) ஓர் அத்தாட்சியாகும். அதை நாம் உயிர்ப்பித்தோம். இன்னும், அதிலிருந்து வித்துக்களை வெளியாக்கினோம். ஆக, அதிலிருந்துதான் அவர்கள் (தங்கள் உணவுகளை) சாப்பிடுகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi33. இறந்து (பொட்டலாகிக்) கிடக்கும் (அவர்கள் வசித்திருந்த) பூமியும் இவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும். அதை நாமே (மழையைக் கொண்டு) உயிர்ப்பித்து அதிலிருந்து தானியங்களை வெளிப்படுத்துகிறோம். அவற்றை இவர்கள் புசிக்கிறார்கள்.