caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yaseen அத்தியாயம், வசனம் 14

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 41 · 36:14

إِذْ أَرْسَلْنَآ إِلَيْهِمُ ٱثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوٓا۟ إِنَّآ إِلَيْكُم مُّرْسَلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களிடம் நாம் இருவரை அனுப்பியபோது அவர்கள் அவ்விருவரையும் பொய்ப்பித்தனர். நாம் மூன்றாவது ஒருவரைக்கொண்டு பலப்படுத்தினோம். அவர்கள் கூறினர்: நிச்சயமாக நாங்கள் உங்கள் பக்கம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்.
Tamil Translation - Omar Sharifஅவர்களிடம் நாம் இருவரை அனுப்பியபோது ஆக, அவர்கள் அவ்விருவரையும் பொய்ப்பித்தனர். நாம் மூன்றாவது ஒருவர் மூலமாக (முந்திய இருவரை) பலப்படுத்தினோம். ஆக, (அந்த மூவரும்) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்கள் பக்கம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்”.
Tamil Translation - Abdulhamid Baqawi14. நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபொழுது அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள். ஆகவே மூன்றாவது தூதரைக் கொண்டு (அவ்விருவருக்கும்) உதவி செய்தோம். ஆகவே, இவர்கள் (மூவரும் அவர்களை நோக்கி) ‘‘மெய்யாகவே நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்களாவோம்'' என்று கூறினார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70