يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُم بِٱللَّهِ ٱلْغَرُورُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமக்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே! ஆகவே, உலக வாழ்க்கை உங்களை மயக்கிவிட வேண்டாம். ஏமாற்றக்கூடியவனும் (ஷைத்தானும்) அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை மயக்கிவிட வேண்டாம்.
Tamil Translation - Omar Sharifமக்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே! ஆகவே, உலக வாழ்க்கை உங்களை மயக்கிவிட வேண்டாம். (ஷைத்தானாகிய) ஏமாற்றக் கூடியவனும் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை மயக்கிவிட வேண்டாம்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை மெய்யாகவே உங்களை மயக்கிவிட வேண்டாம். (ஷைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம்.