caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Faatir அத்தியாயம், வசனம் 36

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 43 · 35:36

وَٱلَّذِينَ كَفَرُوا۟ لَهُمْ نَارُ جَهَنَّمَ لَا يُقْضَىٰ عَلَيْهِمْ فَيَمُوتُوا۟ وَلَا يُخَفَّفُ عَنْهُم مِّنْ عَذَابِهَا كَذَٰلِكَ نَجْزِى كُلَّ كَفُورٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரித்தவர்கள் அவர்களுக்கு நரக நெருப்புதான் உண்டு. அவர்களுக்கு (மரணம் நிகழும் என) தீர்ப்பளிக்கப்படாது. ஆகவே, அவர்கள் மரணிக்க மாட்டார்கள். அதன் தண்டனை அவர்களை விட்டும் இலேசாக்கப்படாது. இப்படித்தான் எல்லா நிராகரிப்பாளர்களுக்கும் நாம் கூலிகொடுப்போம்.
Tamil Translation - Omar Sharifஎவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்புதான் உண்டு. அவர்களுக்கு (மரணம் நிகழும் என) தீர்ப்பளிக்கப்படாது. அவர்களுக்கு மரணம் இருந்தால்தானே அவர்கள் மரணிப்பதற்கு. இன்னும், அதன் தண்டனை அவர்களை விட்டும் லேசாக்கப்படாது. இப்படித்தான் எல்லா நிராகரிப்பாளர்களுக்கும் நாம் கூலிகொடுப்போம்.
Tamil Translation - Abdulhamid Baqawi36. எவர்கள் (நம் வசனங்களை) நிராகரித்து விடுகிறார்களோ அவர்களுக்கு நரக நெருப்புத்தான் (கூலியாகக்) கிடைக்கும். அவர்கள் இறந்துபோகும் விதத்தில் அதில் அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது. (வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பதற்காக உயிருடனேயே இருப்பார்கள்.) மேலும், அவர்களுடைய வேதனையில் ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. இவ்வாறே நிராகரிப்பவர்கள் எல்லோருக்கும் நாம் கூலி கொடுப்போம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70