وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا۟ وَكَانُوا۟ بِـَٔايَٰتِنَا يُوقِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (நமது மார்க்கத்தில்) பொறுமையாக (-உறுதியாக) இருந்தபோது நமது கட்டளையின் படி நேர்வழி காட்டுகின்ற தலைவர்களை அவர்களில் நாம் உருவாக்கினோம். அ(ந்த தலை)வர்கள் நமது வசனங்களை உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தனர்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் (நமது மார்க்கத்தில்) பொறுமையாக (உறுதியாக) இருந்தபோது நமது கட்டளையின்படி நேர்வழி காட்டுகிற தலைவர்களை அவர்களில் நாம் உருவாக்கினோம். அ(ந்தத் தலை)வர்கள் நமது வசனங்களை உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi24. நம் கட்டளைகளைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்த இஸ்ராயீலின் சந்ததிகளில் இருந்த ஒரு கூட்டத்தினரை அவர்களுக்கு வழி காட்டிகளாக அமைத்தோம். அவர்கள் நம் வசனங்களை முற்றிலும் உறுதியுடன் நம்பியவர்களாக இருந்தனர்.