وَأَمَّا ٱلَّذِينَ فَسَقُوا۟ فَمَأْوَىٰهُمُ ٱلنَّارُ كُلَّمَآ أَرَادُوٓا۟ أَن يَخْرُجُوا۟ مِنْهَآ أُعِيدُوا۟ فِيهَا وَقِيلَ لَهُمْ ذُوقُوا۟ عَذَابَ ٱلنَّارِ ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, பாவம் செய்தவர்கள் அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அதிலிருந்து அவர்கள் வெளியேறுவதற்கு நாடும் போதெல்லாம் அதில் அவர்கள் திரும்பக் கொண்டுவரப்படுவார்கள். இன்னும், நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்த நரக வேதனையை (இப்போது) சுவையுங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்படும்.
Tamil Translation - Omar Sharifஆக, எவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மீறினார்களோ அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அதிலிருந்து அவர்கள் வெளியேற நாடும் போதெல்லாம் அதில் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். இன்னும், நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்த நரக தண்டனையை (இப்போது) சுவையுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்படும்.
Tamil Translation - Abdulhamid Baqawi20. எவர்கள் பாவம் செய்கிறார்களோ அவர்களின் தங்குமிடம் நரகம்தான். அதிலிருந்து அவர்கள் வெளிப்பட முயற்சிக்கும் போதெல்லாம் அதனுள் இழுத்துத் தள்ளப்பட்டு ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரக வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள்'' என்று அவர்களுக்குக் கூறப்படும்.