تَتَجَافَىٰ جُنُوبُهُمْ عَنِ ٱلْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَٰهُمْ يُنفِقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களின் விலாக்கள் படுக்கைகளை விட்டு தூரமாக இருக்கும். அவர்கள் தங்கள் இறைவனை பயத்துடனும் ஆசையுடனும் வணங்குவார்கள். நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள்.
Tamil Translation - Omar Sharif(இரவில் அவர்கள் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டிருப்பதால்) அவர்களின் விலாக்கள் படுக்கைகளை விட்டு தூரமாக இருக்கும். அவர்கள் தங்கள் இறைவனை பயத்துடனும் ஆசையுடனும் வணங்குவார்கள். இன்னும், நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi16. அவர்கள் (நித்திரையில் ஆழ்ந்திருக்கும்போது) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தி, தங்கள் இறைவனிடம் (அவனது அருளை) ஆசை வைத்தும், (அவனது தண்டனையை) பயந்தும் பிரார்த்தனை செய்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள்.