caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Luqman அத்தியாயம், வசனம் 17

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 57 · 31:17

يَٰبُنَىَّ أَقِمِ ٱلصَّلَوٰةَ وَأْمُرْ بِٱلْمَعْرُوفِ وَٱنْهَ عَنِ ٱلْمُنكَرِ وَٱصْبِرْ عَلَىٰ مَآ أَصَابَكَ إِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ ٱلْأُمُورِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎன் மகனே! தொழுகையை நிலைநிறுத்து! நன்மையை ஏவு! தீமையை விட்டும் (மக்களைத்) தடு! (சோதனைகளில்) உனக்கு ஏற்பட்டதன் மீது பொறுமையாக இரு! நிச்சயமாக இவைதான் உறுதிமிக்க காரியங்களில் உள்ளவை ஆகும்.
Tamil Translation - Omar Sharifஎன் மகனே! தொழுகையை நிலைநிறுத்து! (மக்களுக்கு) நன்மையை ஏவு! தீமையை விட்டும் (மக்களைத்) தடு! உனக்கு ஏற்பட்ட சோதனையில் பொறுமையாக இரு! நிச்சயமாக இவைதான் உறுதிமிக்க (உயர்வான) காரியங்களில் உள்ளவை ஆகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi17. என்னருமை மகனே! ‘‘ தொழுகையை நிலைநிறுத்து, நன்மையான காரியங்களைக் கொண்டு ஏவி, பாவமான காரியங்களில் இருந்து (மனிதர்களை) விலக்கி வா. உனக்கேற்படும் சிரமங்களைப் பொறுமையுடன் நீ சகித்துக்கொள். நிச்சயமாக இது எல்லா காரியங்களிலும் வீரமிக்கச் செயலாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70