وَلَقَدْ ءَاتَيْنَا لُقْمَٰنَ ٱلْحِكْمَةَ أَنِ ٱشْكُرْ لِلَّهِ وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِۦ وَمَن كَفَرَ فَإِنَّ ٱللَّهَ غَنِىٌّ حَمِيدٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக, லுக்மானுக்கு நாம் ஞானத்தை வழங்கினோம். அதாவது: நீர் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவீராக! யார் நன்றி செலுத்துவாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் தன் நன்மைக்காகத்தான். எவர் நிராகரிப்பாரோ (அவரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் நிறைவானவன், மிகுந்த புகழாளன்.
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக நாம் லுக்மானுக்கு ஞானத்தை வழங்கினோம். அதாவது: நீர் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவீராக! யார் நன்றி செலுத்துவாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் தன் நன்மைக்காகத்தான். எவர் நிராகரிப்பாரோ (அவரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் நிறைவானவன், மிகுந்த புகழாளன்.
Tamil Translation - Abdulhamid Baqawi12. லுக்மானுக்கு நாம் ஞானத்தைக் கொடுத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்படி கூறினோம். ஏனென்றால், எவர் நன்றி செலுத்துகிறாரோ அவர் தன் நன்மைக்காகவே நன்றி செலுத்துகிறார். எவன் நிராகரிக்கிறானோ (அவன் தனக்கே தீங்கு தேடிக்கொள்கிறான். அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனும் புகழுடையவனும் ஆவான்.