فَٱصْبِرْ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ وَلَا يَسْتَخِفَّنَّكَ ٱلَّذِينَ لَا يُوقِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையானதே! (இறையத்தாட்சியை) உறுதிகொள்ளாதவர்கள் உம்மை (-உமது பொறுமையை) இலேசாக கருதிவிட வேண்டாம். (பின்னர் உமது தீனிலிருந்து உம்மை திருப்பிவிட அவர்கள் முயற்சி செய்துவிடவேண்டாம். அது அவர்களால் முடியாது.)
Tamil Translation - Omar Sharifஆக, பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையாகும்! (மறுமையை) உறுதி கொள்ளாதவர்கள் உம்மை (-உமது பொறுமையை) இலேசாகக் கருதிவிட வேண்டாம். (அப்படி அவர்கள் உமது பொறுமையை இலேசாக பார்த்துவிட்டால் உமது தீனிலிருந்து உம்மை திருப்பிவிட முயற்சிப்பார்கள்.)
Tamil Translation - Abdulhamid Baqawi60. ஆகவே, (நபியே!) நீர் (சகித்துக்கொண்டு) பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி மெய்யானது. (ஆகவே, முடிவில் நபியே! நீர்தான் வெற்றி பெறுவீர்.) மறுமையை நம்பாத இவர்கள் நிச்சயமாக உம்மை இலேசாக எண்ணிவிட வேண்டாம்.