caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Room அத்தியாயம், வசனம் 58

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 84 · 30:58

وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِى هَٰذَا ٱلْقُرْءَانِ مِن كُلِّ مَثَلٍ وَلَئِن جِئْتَهُم بِـَٔايَةٍ لَّيَقُولَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ أَنتُمْ إِلَّا مُبْطِلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇந்த குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் நாம் திட்டவட்டமாக மக்களுக்கு விவரித்துள்ளோம். நீர் அவர்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டுவந்தால் திட்டமாக நிராகரித்தவர்கள் கூறுவார்கள்: “(முஹம்மதை நம்பிக்கை கொண்டவர்களே!) நீங்கள் பொய்யர்களே தவிர வேறில்லை”.
Tamil Translation - Omar Sharifஇந்தக் குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் நாம் திட்டவட்டமாக மக்களுக்கு விவரித்துள்ளோம். இன்னும், நீர் அவர்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டுவந்தால் திட்டமாக நிராகரித்தவர்கள் கூறுவார்கள்: “(முஹம்மதை நம்பிக்கை கொண்டவர்களே!) நீங்கள் பொய்யர்களே தவிர வேறில்லை”.
Tamil Translation - Abdulhamid Baqawi58. மனிதர்களுக்கு (திருப்தி அளிப்பதற்காக) வேண்டிய உதாரணங்கள் அனைத்தையும் இந்த குர்ஆனில் நிச்சயமாக நாம் கூறியே இருக்கிறோம். (இதை அங்கீகரிக்காத அவர்கள் விரும்பும்) ஓர் அத்தாட்சியை நீர் அவர்களிடம் கொண்டு வந்தபோதிலும் (நபியே! உம்மையும் உம்முடன் இருப்பவர்களையும் நோக்கி) நீங்கள் பொய்யர்களேதவிர வேறில்லை'' என்று இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70