وَقَالَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ وَٱلْإِيمَٰنَ لَقَدْ لَبِثْتُمْ فِى كِتَٰبِ ٱللَّهِ إِلَىٰ يَوْمِ ٱلْبَعْثِ فَهَٰذَا يَوْمُ ٱلْبَعْثِ وَلَٰكِنَّكُمْ كُنتُمْ لَا تَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகல்வியும் ஈமானும் கொடுக்கப்பட்டவர்கள் கூறுவார்கள்: அல்லாஹ்வின் விதிப்படி நீங்கள் எழுப்பப்படுகின்ற நாள் வரை திட்டவட்டமாக தங்கினீர்கள். இதோ எழுப்பப்படுகின்ற (அந்த) நாள் (வந்து விட்டது). என்றாலும் நீங்கள் அறியாதவர்களாக இருந்தீர்கள்.
Tamil Translation - Omar Sharifகல்வியும் ஈமானும் கொடுக்கப்பட்டவர்கள் கூறுவார்கள்: அல்லாஹ்வின் விதிப்படி நீங்கள் எழுப்பப்படுகின்ற நாள் வரை திட்டவட்டமாக தங்கி இருந்தீர்கள். இதோ எழுப்பப்படுகின்ற (அந்த) நாள் (வந்து விட்டது). என்றாலும், நீங்கள் (இந்த நாள் உண்மையில் நிகழும் என்பதை) அறியா(மலும் நம்பிக்கை கொள்ளா)தவர்களாக இருந்தீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi56. எனினும், கல்வியறிவும் நம்பிக்கையும் கொடுக்கப்பட்டவர்கள் (அதை மறுத்து) ‘‘அல்லாஹ் எழுதியவாறு நீங்கள் உயிர் பெற்றெழும் இந்நாள் வரை (பூமியில்) இருந்தீர்கள். இது (மரணித்தவர்கள்) உயிர் பெற்றெழும் நாள். நிச்சயமாக நீங்கள் இதை உறுதி கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்'' என்றும்,