فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ ٱلْقَيِّمِ مِن قَبْلِ أَن يَأْتِىَ يَوْمٌ لَّا مَرَدَّ لَهُۥ مِنَ ٱللَّهِ يَوْمَئِذٍ يَصَّدَّعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, (நபியே!) அதை தடுக்க முடியாத ஒரு நாள் அல்லாஹ்விடமிருந்து வருவதற்கு முன்னர் உமது முகத்தை நேரான மார்க்கத்தின் பக்கம் நிறுத்துவீராக! அந்நாளில் அவர்கள் (-மக்கள் இரண்டு பிரிவுகளாக) பிரிந்து விடுவார்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, (நபியே!) அதை தடுக்க முடியாத ஒரு நாள் அல்லாஹ்விடமிருந்து வருவதற்கு முன்னர் உமது முகத்தை நேரான மார்க்கத்தின் பக்கம் நிலை நிறுத்துவீராக! அந்நாளில் அவர்கள் (-மக்கள் இரண்டு பிரிவுகளாக) பிரிந்து விடுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi43. ஆகவே, (நபியே!) அல்லாஹ்விடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே நீர் உமது முகத்தை நிலையான (நீதமான) மார்க்கத்தளவில் திருப்பிவிடுவீராக. அந்நாளில் (நல்லவர்களும், தீயவர்களும்) வெவ்வேறாகப் பிரிந்து விடுவார்கள்.