ٱللَّهُ ٱلَّذِى خَلَقَكُمْ ثُمَّ رَزَقَكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ هَلْ مِن شُرَكَآئِكُم مَّن يَفْعَلُ مِن ذَٰلِكُم مِّن شَىْءٍ سُبْحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்தான் உங்களைப் படைத்தான். பிறகு, அவன் உங்களுக்கு உணவளித்தான். பிறகு, அவன் உங்களை மரணிக்க வைப்பான். பிறகு, அவன் உங்களை உயிர்ப்பிப்பான். இவற்றில் (-இந்தக் காரியங்களில்) எதையும் செய்கின்றவர் உங்கள் தெய்வங்களில் இருக்கின்றாரா? அவன் (-அல்லாஹ்) மிக பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக உயர்ந்தவன்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்தான் உங்களைப் படைத்தான். பிறகு, அவன் உங்களுக்கு உணவளித்தான். பிறகு, அவன் உங்களை மரணிக்க வைப்பான். பிறகு, அவன் உங்களை உயிர்ப்பிப்பான். இவற்றில் (-இந்தக் காரியங்களில்) எதையும் செய்பவர் உங்கள் தெய்வங்களில் இருக்கிறாரா? (அல்லாஹ்வாகிய) அவனோ மிக பரிசுத்தமானவன். இன்னும், அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக உயர்ந்தவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi40. அல்லாஹ்தான் உங்களை படைத்தவன். உங்களுக்கு உணவு கொடுப்பவனும் அவனே. பின்னர், அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பான். இவற்றில் எதையும் செய்யக்கூடிய சக்தி உங்கள் தெய்வங்களில் எதற்கும் உண்டோ? இவர்கள் செய்யும் (இத்தகைய) இணைகளிலிருந்து அல்லாஹ் மிக்க உயர்ந்தவன்; அவன் மிகப் பரிசுத்தமானவன்.