قُلْ يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ لِمَ تَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ مَنْ ءَامَنَ تَبْغُونَهَا عِوَجًا وَأَنتُمْ شُهَدَآءُ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகூறுவீராக: "வேதக்காரர்களே! நம்பிக்கையாளரை அல்லாஹ்வின் பாதையை விட்டும் ஏன் தடுக்கிறீர்கள்? அதில் கோணலை (குறையை)த் தேடுகிறீர்கள்! (அதன் உண்மைக்கு) நீங்களே சாட்சிகள். நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை."
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “வேதக்காரர்களே! நம்பிக்கையாளர்களை அல்லாஹ்வின் பாதையை விட்டும் ஏன் தடுக்கிறீர்கள்? அதில் கோணலை (-குறையை)த் தேடுகிறீர்கள், (அதன் உண்மைக்கு) நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள். நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.’’
Tamil Translation - Abdulhamid Baqawi99. (மேலும்,) கூறுவீராக: வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வின் பாதையை விட்டும் நம்பிக்கையாளர்களை ஏன் தடுக்கிறீர்கள். (அது உண்மைதான் என்று) நீங்கள் சாட்சி கூறிக்கொண்டே அதைக் கோணலாக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்வதைப்பற்றி அல்லாஹ் பராமுகமாய் இல்லை.