caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 95

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:95

قُلْ صَدَقَ ٱللَّهُ فَٱتَّبِعُوا۟ مِلَّةَ إِبْرَٰهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ ٱلْمُشْرِكِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக: "அல்லாஹ் உண்மை கூறிவிட்டான். ஆகவே, இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடைய இப்ராஹீமின் மார்க்கத்தை பின்பற்றுங்கள். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை."
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் உண்மை கூறிவிட்டான். ஆகவே, இஸ்லாமிய மார்க்கத்தில் (ஏகத்துவ கொள்கையில்) உறுதியுடையவரான இப்ராஹீமின் மார்க்கத்தை நீங்கள் பின்பற்றுங்கள். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை.’’
Tamil Translation - Abdulhamid Baqawi95. (நபியே!) கூறுவீராக: ‘‘(இவற்றைப் பற்றி) அல்லாஹ் கூறியவைதான் (முற்றிலும்) உண்மை. ஆகவே, (நம்பிக்கையாளர்களே! இவர்களைப் புறக்கணித்துவிட்டு) நேரான வழியில் சென்ற இப்ராஹீமுடைய மார்க்கத்தையே பின்பற்றுங்கள். அவர் இணைவைத்து வணங்குபவராக இருக்கவில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70