caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 52

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:52

فَلَمَّآ أَحَسَّ عِيسَىٰ مِنْهُمُ ٱلْكُفْرَ قَالَ مَنْ أَنصَارِىٓ إِلَى ٱللَّهِ قَالَ ٱلْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ ٱللَّهِ ءَامَنَّا بِٱللَّهِ وَٱشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களில் (பலர் தம்மை) நிராகரிப்பதை ஈஸா உணர்ந்த போது "அல்லாஹ்விற்காக என் உதவியாளர்கள் யார்?" எனக் கூறினார். தோழர்கள் "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோம். நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என (நீர்) சாட்சி அளிப்பீராக" என்று கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்களில் (பலர் தம்மை) நிராகரிப்பதை ஈஸா உணர்ந்த போது, “அல்லாஹ்விற்காக எனது உதவியாளர்கள் யார்?’’ எனக் கூறினார். (அவருடைய உண்மையான) தோழர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் (தூதராகிய உமக்கு) உதவியாளர்களாக இருப்போம். நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோம். இன்னும், நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என (நீர்) சாட்சி அளிப்பீராக’’ என்று கூறினார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi52. அவர்களில் பலர் (தம்மை) நிராகரிப்பதை ஈஸா உணர்ந்த பொழுது (அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர் யார்?'' எனக் கேட்டார். (அதற்கு) அவருடைய தோழர்கள் ‘‘நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்களுக்கு) உதவி செய்கிறோம். மெய்யாகவே! அல்லாஹ்வை நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். (ஆதலால்,) நிச்சயமாக நாங்கள் (முஸ்லிம்கள்) முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டோம் என்பதாக நீர் சாட்சி கூறுவீராக' என்று கூறினார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70