رَّبَّنَآ إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِى لِلْإِيمَٰنِ أَنْ ءَامِنُوا۟ بِرَبِّكُمْ فَـَٔامَنَّا رَبَّنَا فَٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّـَٔاتِنَا وَتَوَفَّنَا مَعَ ٱلْأَبْرَارِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎங்கள் இறைவா! "உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று நம்பிக்கையின் பக்கம் அழைக்கின்ற ஓர் அழைப்பாளரை நிச்சயமாக நாங்கள் செவிமடுத்தோம். ஆகவே, நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! ஆகவே, எங்களுக்கு எங்கள் பாவங்களை மன்னி! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அகற்றிடு! நல்லோருடன் எங்களுக்கு மரணத்தைத் தா!
Tamil Translation - Omar Sharif“எங்கள் இறைவா! ஓர் அழைப்பாளர், உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள் என்று நம்பிக்கையின் பக்கம் (எங்களை) அழைப்பதை நிச்சயமாக நாங்கள் செவிமடுத்தோம். ஆகவே, (உன்னையும் அவரையும்) நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! ஆகவே, எங்களுக்கு எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! இன்னும், எங்கள் குற்றங்களை எங்களை விட்டு அகற்றிவிடுவாயாக! இன்னும், (நீ எங்களுக்கு மரணத்தை கொடுக்கும்போது) அப்ரார்[1] என்ற நல்லோருடன் எங்களுக்கு மரணத்தைத் தருவாயாக! (எங்களையும் அவர்களில் சேர்த்து, அவர்களுடன் எங்களை எழுப்புவாயாக!)”
Tamil Translation - Abdulhamid Baqawi193. எங்கள் இறைவனே! (உன்) தூதரின் அழைப்பை நாங்கள் நிச்சயமாக செவியுற்றோம். (அவர்) எங்களை நம்பிக்கையின்பக்கம் அழைத்து ‘‘உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள்'' என்று கூறினார். நாங்களும் (அவ்வாறே) நம்பிக்கை கொண்டோம். ஆதலால், எங்கள் இறைவனே! நீ எங்கள் குற்றங்களை மன்னிப்பாயாக! எங்கள் பாவங்களை எங்களை விட்டும் அகற்றிடுவாயாக! (முடிவில்) நல்லவர்களுடன் எங்கள் உயிரை கைப்பற்றுவாயாக!